மாமியாரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவருக்கு ஆர்த்தி என்ற மகளும் வசந்த குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகள் ஆர்த்திக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாஅ ஒரே வாரத்தில் அவருக்கு ஜன்னி வந்துவிட்டதால் பயந்து போன ஆர்த்தி தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மனைவியை பிரிந்து மாங்குட்டைபாளையத்தில் தனியாக வசித்து வந்த கார்த்தி கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருவேப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு அருகில் குடிவந்துள்ளார். மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்கு மாமியார் தடையாக இருப்பதாக எண்ணி அவருடன் சண்டையிட்டுள்ளார்.
சம்பவதன்று வழக்கம் போல மாலை சண்டை போட்டபோது ஆர்த்தி அழைத்து வர அவரது தம்பி சென்றதால் மாமியாரை குழவிக் கல்லால் தாக்கியுள்ளார். இதில் , அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஊர் மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைதுச் செய்தனர்.