21வது திருத்தம் குறித்து சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு….  

ஜக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று சட்டமா அதிபர் நேற்று (26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆவது திருத்தங்களின் தனிப்பட்ட தீர்மானங்களில் உள்ள சில விதிகள், அரசியலமைப்புக்கு முரணானவை எனவும் அவை நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கோரி முன்வைக்கப்பட்ட மனுக்கள் நேற்று (26) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் அதன் மத்திய சபை உறுப்பினர் நுவன் பெல்லந்துடாவ, தேசிய அமைப்பின் சார்பில் கலாநிதி குணதாச அமரசேகர, கேணல் அனில் அமரசேகர உள்ளிட்டோரினால் ,ந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சட்டமா அதிபரின் ,நத ஆலோசனைகள் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ,ந்திகா தேமுனி டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

,ந்த விசாரணையின் போது, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 22வது திருத்தச்சட்டத்தை மீளப்பெறுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபாநாயகரிடம் தெரிவித்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.