தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.
மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
5 நாட்களில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜூன் மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
காவல்துறை குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாறவேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்