நீங்களே இறக்குமதி செஞ்சுக்கோங்க: அனுமதி வழங்கிய இலங்கை அரசு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் துறைகள் தங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம் என இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கூறியபோது இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மொத்தமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் தனியார் துறைகள் தங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும் பதிவு செய்துள்ளார்.

இலங்கை: 1 லட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட திட்டம்.. ரணில் விக்கிரமசிங்கே திடீர் முடிவு..!

 இறக்குமதிக்கு அனுமதி

இறக்குமதிக்கு அனுமதி

இலங்கை தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் மற்றும் இயந்திரங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்ய சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமைச்சர்

இலங்கை அமைச்சர்

இதன் காரணமாக அரசு நிறுவனம் மொத்தமாக எரிபொருளை இறக்குமதி செய்யும் சுமை குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இதுகுறித்து ஏற்கனவே இலங்கை அமைச்சரவை பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்திருத்தம்
 

சட்டத்திருத்தம்

அதன்படி ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான உரிமைகள் வழங்குவது குறித்து அந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான எரிபொருளை எந்த நாட்டிலிருந்தும், இறக்குமதி செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதால் தனியார் நிறுவனங்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளன.

திவால்

திவால்

இலங்கை நாடு கிட்டத்தட்ட திவால் ஆகி விட்ட நிலையில், அந்நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மோசமான நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல் விலை தற்போது ஒரு லிட்டர் ரூபாய் 420 என்றும், டீசல் விலை ஒரு லிட்டர் விலை 400 ரூபாய் என்றும் விற்பனையாகி வருகிறது.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

கடந்த 1948ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்படி ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடன்கள்

கடன்கள்

மேலும் இலங்கை வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளது என்பதும் அதனால் இந்த ஆண்டுக்கான 7 பில்லியன் டாலர் கடனை வெளிநாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் தற்போது 50 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri Lanka allows private companies to import fuel

Sri Lanka allows private companies to import fuel | நீங்களே இறக்குமதி செஞ்சுக்கோங்க: அனுமதி வழங்கிய இலங்கை அரசு!

Story first published: Friday, May 27, 2022, 17:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.