தெலுங்கானாவுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாட்டுக்கு பெரும் இழப்பா..?

தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்த நிலையில் சமீபத்தில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்கள் அதிகளவிலான முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்த்து வருகிறது.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன தமிழ்நாட்டை விடுத்து தென் கொரியாவின் ஹூண்டாய் மிகப்பெரிய தொகையைத் தெலுங்கானாவில் முதலீடு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

16 பில்லியன் டாலர் முதலீடு.. அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி..!

தெலுங்கானா அரசு

தெலுங்கானா அரசு

தெலுங்கானா மாநில அரசு அறிமுகம் செய்த மொபிலிட்டி வேலி திட்டத்தில் தென் கொரியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் சுமார் 1400 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக டெஸ்டிங் டிராக் உருவாக்க உள்ளது.

மொபிலிட்டி வேலி திட்டம்

மொபிலிட்டி வேலி திட்டம்

இத்திட்ட அறிவிப்பு மூலம் தெலுங்கானா அரசின் மொபிலிட்டி வேலி திட்டத்தின் முதல் மற்றும் முக்கியக் கூட்டணி நிறுவனமான ஹூண்டாய் மாறியுள்ளது எனத் தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 1400 கோடி முதலீடு
 

1400 கோடி முதலீடு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த பொருளாதாரக் கூட்டத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை இன்னோவேஷன் அதிகாரி யங்சோ சி மற்றும் தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் உடன் நடத்திய சந்திப்பின் போது 1400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

மேலும் தெலுங்கானா அரசின் மொபிலிட்டி வேலி திட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து முதலீடுகளைச் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டெஸ்ட் டிராக்ஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, இதேபோல் தமிழ்நாட்டில் ஹூண்டாய் கார் உற்பத்தி தொழிற்சாலையும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Hyundai will invest Rs.1400 crore in Telangana’s Mobility Valley; davos success

Hyundai will invest Rs.1400 crore in Telangana’s Mobility Valley; davos success தெலுங்கானாவுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாட்டுக்கு பெரும் இழப்பா..?

Story first published: Friday, May 27, 2022, 17:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.