கோல்கட்டா,: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், மற்றொரு விளம்பர மாடல் நேற்று தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவைச் சேர்ந்த விளம்பர மாடல் மற்றும் ‘டிவி’ நடிகை பிதிஷா மஜும்தார், கடந்த 25ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிதிஷாவின் தோழியும், விளம்பர மாடலுமான மஞ்சுஷா நியோகி என்பவர், கோல்கட்டாவின் பட்டுலி என்ற இடத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தோழி பிதிஷா இறந்த நாளில் இருந்தே கடும் மன அழுத்தத்தால் மஞ்சுஷா பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அடிக்கடி அவரைப் பற்றி பேசி கதறி அழுததாகவும் அவரது தாய் தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோல்கட்டா,: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், மற்றொரு விளம்பர மாடல் நேற்று தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவைச் சேர்ந்த விளம்பர மாடல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.