அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள்.. அதிகம் சம்பளம் வாங்கும் அமெரிக்க பெண் CEO-க்கள்.. எவ்வளவு?

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்களின் சம்பள விகிதமானது பல்வேறு துறைகளில் பெரியளவில் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஒரு தரப்பினர் தங்களது வேலையினையும் இழந்தனர். சில துறைகளில் சம்பள குறைப்பும் இருந்தது.

இந்த இக்கட்டான நிலையிலும் நிறுவனங்களை சரியாக வழி நடத்தி சென்ற தலைமை செயல் அதிகாரிகளுக்கான சம்பள விகிதம் என்பது கணிசமாக கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் 2021ம் ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கிய பெண் தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலைத் தான் இந்த லிஸ்டில் பார்க்க இருக்கிறோம்.

மும்பையில் புதிய வேலைவாய்ப்பு 41% வளர்ச்சி.. சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா? அப்போ சென்னை..?

பெண்களுக்கு சம்பளம் அதிகம்

பெண்களுக்கு சம்பளம் அதிகம்

கடந்த 2021ம் ஆண்டில் பொருளாதாரம் மீண்டு வந்த நிலையில், நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியினை எட்ட ஆரம்பித்தன. நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் சி இ ஒ-க்களின் சம்பளமும் அதிகரித்தது. இது குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்களுக்கான சராசரி ஊதியம் 26.4% அதிகரித்து கிட்டதட்ட 16 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. எனினும் இந்த சம்பள அதிகரிப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்னும் பெரியளவிலான வேறுபாடு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சம்பளம் அதிகரிப்பு

சம்பளம் அதிகரிப்பு

பெண் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் அதிகரித்தாலும், இது இன்னும் நிறைய அதிகரிக்க வேண்டியுள்ளது. எஸ் & பி அறிக்கையின் படி 340 சிஈஓ-க்களில் 18 பேர் பெண்களாகும். இது 2020ல் 16 பேராக இருந்தது. இவர்களின் சம்பள விகிதம் பல ஆண்டுகளாக மிதமாக இருந்த வந்த நிலையில் கடந்த ஆண்டில் நல்ல ஏற்றம் கண்டுள்ளது. எஸ் &பி நிறுவனங்களில் லாபம் சுமார் 50% ஏற்றம் கண்டது. இதே இன்டெக்ஸ்கள் 27% அதிகரித்தது. இந்த நிலையில் சம்பளமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பெண்கள் அதிக வளர்ச்சி
 

பெண்கள் அதிக வளர்ச்சி

எனினும் இது ஆண் CEO-க்களை விட ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். இது 17.7% அதிகரித்து, 14.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதே ஒட்டுமொத்த சராசரி சம்பளம் 17.1% அதிகரித்து, 14.5 மில்லியனாக இருந்தது. அமெரிக்க நிறுவனங்களில் இருக்கும் பெண் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம், ஆண்களை விட சிலருக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

லிசா டி.சூ

லிசா டி.சூ

லிசா டி.சூ: அட்வான்ஸ் மைக்ரோ டிவைசஸ் வருமானம்: $29.5 மில்லியன், இவரின் சம்பளம் கடந்த ஆண்டினை காட்டிலும் 9% அதிகரித்துள்ளது. இவர் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக அதிக ஊதியம் பெறும் பெண் CEO ஆக உள்ளார். இந்த காலகட்டத்தில் பங்கு விலை 57% அதிகரித்துள்ளது. அவரது அடிப்படை சம்பளம் 1.1 மில்லியப் டாலராகும்.

மேரி டி பர்ரா

மேரி டி பர்ரா

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மேரி டி பர்ராவின் சம்பளம் 25% அதிகரித்து, 29.1 மில்லியம் டாலராக அதிகரித்துள்ளது. இவரின் அடிப்படை சம்பளம் 2.1 மில்லியன் டாலராகும். இவருக்கு பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரிசாக 18.5மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

பிப் என். நோவாகோவிக்

பிப் என். நோவாகோவிக்

ஜெனரல் டைனமிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பிப் என். நோவாகோவிக்-ம் சம்பளம் $23.6 மில்லியனாகும். பல்வேறு நிறுவனங்களி உயர் பதவிகளை வகித்த இவர், 2018 நிலவரப்படி உலகின் 25வது சிறந்த பவர்ஃபுல் பெண்ணாக ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி தேர்தெடுக்கப்பட்டார்.

 அடெனா ஃப்ரெட்மேன்

அடெனா ஃப்ரெட்மேன்

நாஷ்டேக்-கின் அடெனா ஃப்ரெட்மேன் சம்பள விகிதம் $20 மில்லியன் ஆகும். நாஸ்டேக்கின் 2021 வருவாய் விகிதம் 21.4% ஆகும்.

இதே நார்த்ரோப் கிரம்மான் காதே ஜே.வார்டன் வருமானம் $19.5 மில்லியன் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: salary us சம்பளம்

English summary

Salary rate for female CEOs to increase by 26% in 2021

The salaries of female American CEOs in 2021 saw good growth. It increased by an average of 26.4% to almost $ 16 million.

Story first published: Friday, May 27, 2022, 16:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.