அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ-க்கள் யார் யார் தெரியுமா?

ஒரு நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குவது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற சி.இ.ஓ தான் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கும் தலைமை செயல் அதிகாரியின் செயல்பாட்டை பொருத்தே அந்நிறுவனத்தின் வளர்ச்சி இருப்பதால் தலைமை செயல் அதிகாரிகளுக்கு நிறுவன உரிமையாளர்கள் சம்பளத்தை வாரி வழங்குகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கிய தலைமை செயல் அதிகாரி பட்டியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய எரிவாயு தொழிற்சாலை பங்குகளை வாங்கும் இந்தியா..? பிரிட்டன் நிறுவனத்திற்கு வாழ்வு தான்..!!

சி.இ.ஓ சம்பளம்

சி.இ.ஓ சம்பளம்

குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தில் இரண்டு முழு நிதி ஆண்டுகள் பணியாற்றிய தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் ஆய்வு செய்யப்பட்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

இந்த பட்டியலில் இருந்து தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 14.5 மில்லியன் டாலர் உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. இதில் சம்பளம் மட்டுமின்றி நிறுவனத்தின் பங்கு மற்றும் பிற சலுகைகளும் அடங்கும்.

சம்பளமும் பங்கும்
 

சம்பளமும் பங்கும்

தலைமை செயல் அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்குகளையும் வைத்திருப்பதால் அந்த பங்குகள் மூலம் தான் அதிக வருவாயை பெற்று வருகின்றனர் என்பதும், ஆனால் அதே நேரத்தில் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லாமல் போனால் பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருவாய் குறையவும் வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021ல் சி.இ.ஓ சம்பளம்

2021ல் சி.இ.ஓ சம்பளம்

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய ஆண் மற்றும் பெண் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பள விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

அதிக சம்பளம் வாங்கும் ஆண் தலைமை செயல் அதிகாரிகள்

அதிக சம்பளம் வாங்கும் ஆண் தலைமை செயல் அதிகாரிகள்

1. பிட்டர் கெர்ன்: எக்ஸ்பீடியா குரூப், வருமானம்: $296.2 மில்லியன்

2. டேவிட் ஜாஸ்லவ்: வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் – வருமானம் $246.6 மில்லியன்

3. வில்லியம் மெக்டர்மாட்: சர்வீஸ் நெள வருமானம்: $165.8 மில்லியன்

4. டிம் குக்: ஆப்பிள் வருமானம்: $98.7 மில்லியன்

5. ஜேமி டிம்மன்: ஜேபி மோர்கன் சேஸ் வருமானம்: $84.4 மில்லியன்

அதிக சம்பளம் வாங்கும் பெண் தலைமை செயல் அதிகாரிகள்

அதிக சம்பளம் வாங்கும் பெண் தலைமை செயல் அதிகாரிகள்

1. லிசா டி.சூ: அட்வான்ஸ் மைக்ரோ டிவைசஸ் வருமானம்: $29.5 மில்லியன்

2. மேரி டி பர்ரா ஜெனரல் மோட்டார்ஸ் வருமானம்: #29.1 மில்லியன்

3. பிப் என். நோவாகோவிக்: ஜெனரல் டைனமிஸ் வருமானம்: $23.6 மில்லியன்

4. அடெனா ஃப்ரெட்மேன்: நாஷ்டேக் வருமானம்: $20 மில்லியன்

5. காதே ஜே.வார்டன்: நார்த்ரோப் கிரம்மான் வருமானம் $19.5 மில்லியன்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Who were the highest paid male CEOs in the US in 2021?

Who were the highest paid male CEOs in the US in 2021? | அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ-க்கள் யார் யார் தெரியுமா?

Story first published: Friday, May 27, 2022, 15:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.