நீலகிரி: கூடலூர் அருகே ஒவேலி பாரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மும்தாஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். ஆரோட்டுப்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஆனந்த் என்பவர் பலியான நிலையில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். காட்டுயானை தாக்கி உயிரிழந்த மும்தாஜ் உடலை எடுக்க விடாமல் வனத்துறையினரை மக்கள் சிறைபிடித்துள்ளனர்.