2000 ரூபாய் நோட்டுக்கு எண்ட் கார்டா? ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. வெகு விரைவில் 2000 ரூபாய் நோட்டுக்கு எண்ட் கார்டு போடப்படும் என தெரிகிறது.

2020 ஆம் ஆண்டைவிட 2021 ஆம் ஆண்டிலும், 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டிலும் 2000 ரூபாய் நோட்டு வெகுவாக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி 500 ரூபாய் 1000 ரூபாய் பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட பின்னர் 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது.

எல்.ஐ.சி பங்குகள் வாங்கியவர்கள் தலையில் துண்டு: ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு

2000 ரூபாய் நோட்டு

2000 ரூபாய் நோட்டு

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் 2020 ஆம் ஆண்டில் 27,398 லட்சமாகவும், 2021 ஆம் ஆண்டில் 24,510 லட்சமாகவும், மார்ச் உடன் முடிவடைந்த 2022ஆம் நிதியாண்டில் 21,420 லட்சமாகவும் குறைந்துள்ளது.

புழக்கம்

புழக்கம்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 4 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடவில்லை என்பதும் புழக்கம் குறைவதற்கான காரணம் ஆகும். ஆனால் அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

500 ரூபாய் நோட்டு
 

500 ரூபாய் நோட்டு

2021 ஆம் ஆண்டு 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 386,790 லட்சம் என்றிருந்த நிலையில் 2022 மார்ச் உடன் முடிந்த நிதியாண்டில் 455,468 லட்சமாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

கடந்த நிதியாண்டில், 500 ரூபாய் நோட்டுகள் புதியதாக 128,003 என்ற எண்ணிக்கையில் புழக்கத்திற்கு விடப்பட்டன என்றும், மார்ச் 2022 நிலவரப்படி 500 ரூபாய் நோட்டுக்கள் 455,468 என்ற எண்ணிக்கையில் புழக்கத்தில் விடப்பட்டன என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

மேலும் இந்த நிதியாண்டில் பொதுமக்களால் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட நோட்டுக்கள் 100 ரூபாய் என்றும் மிகவும் குறைவாக பயன்படுத்த நோட்டுகள் 2000 ரூபாய் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாணயம்

நாணயம்

அதேபோல் நாணயங்களை பொருத்தவரை 5 ரூபாய் நாணயம் மிக அதிகமாக பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கள்ள நோட்டுக்கள்

கள்ள நோட்டுக்கள்

கள்ள நோட்டுகளை பொருத்தவரை 500 ரூபாய் கள்ள நோட்டு மிக அதிகமாக புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 101.9 சதவீதமாகவு,, 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 54.6 சதவீதமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது. மிகவும் குறைவாக பத்து ரூபாய் கள்ளநோட்டு 16.4 சதவீதம் மட்டுமே இருந்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

2000 note circulation falls 12.6% in 2022 says RBI

2000 note circulation falls 12.6% in 2022 says RBI | 2000 ரூபாய் நோட்டுக்கு எண்ட் கார்டா? ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

Story first published: Saturday, May 28, 2022, 8:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.