நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 50 கிலோ வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்தார்

நாமக்கல்

நாமக்கல்:

சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம்

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மேல்தளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 50 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. அதை கலெக்டர் ஸ்ரேயா சிங், நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் அதன் மின் உற்பத்தி திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சேமிப்பு

இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தின் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் இயங்குவது மட்டும் அல்லாமல், மீதமுள்ள மின்சாரமானது மின்வாரியத்திற்கு அனுப்பி சேமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவிப்பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.