சென்னையில் மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொழிச்சலூர் பகுதியில் பிரகாஷ்(41) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் தனியார் ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் அவரது மனைவி காயத்திரி (39), மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன் (8)ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரகாஷ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் பிரகாஷ் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் பொலிசார் நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர்.
கடன் தொல்லையால் ஐ.டி. ஊழியர் பிரகாஷ் விபரீத முடிவு எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.