Oppo A57: ரூ.12 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஒப்போ போன்!

Oppo A57: சீனாவின்
ஒப்போ
நிறுவனம் புதிய
ஒப்போ ஏ57
ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக தாய்லாந்தில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A57 5G போனில் இருந்து வேறுபட்டது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் 4G LTE ஆதரவுடன் அறிமுகமாகியுள்ளது.

Indian Dating Apps: உங்கள் துணையை தேட உதவும் உண்மையான ஆப்ஸ்!

புதிய ஒப்போ போன் ரூ.13,000க்கும் குறைவான விலையிலுள்ள ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த போனில் எச்டி+ டிஸ்ப்ளே, 5,000mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் கொண்ட இரட்டை கேமரா ஆகியவை போனின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

​SmartPhone Tips: போனை விற்கும் முன் இந்த 3 விஷயத்த செய்ய மறந்துடாதீங்க!

ஒப்போ ஏ57 விலை (OPPO A57 Price in India)

OPPO A57 போனானது தாய்லாந்தில் 5,499 THB என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.12,500 ஆக இருக்கிறது. க்ளோயிங் க்ரீன், க்ளோவிங் பிளாக் ஆகிய நிறத் தேர்வுகளில் இது கிடைக்கிறது.

பிற சந்தைகளில் இந்த போன் எப்போது வெளியிடப்படும் என்று நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இந்தியாவில் இந்த பட்ஜெட் ஒப்போ போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi 10: விரைவில் இந்தியா வரும் ரெட்மி 10 பிரைம் பிளஸ் பட்ஜெட் 5ஜி போன்!

ஒப்போ ஏ57 அம்சங்கள் (OPPO A57 Specifications)

ஒப்போ ஏ57 ஸ்மார்ட்போனில் 6.56″ அங்குல தொடுதிரை உள்ளது. இது வாட்டர் டிராப் நாட்ச் உடன் வரும் டிஸ்ப்ளே ஆகும். டிஸ்ப்ளே ஆனது 720×1612 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்புக்காக பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 (
MediaTek Helio G35
) சிப்செட் உள்ளது. ரேம் மெமரியாக 3ஜிபி ரேம், ஸ்டோரேஜ் மெமரிக்காக 64ஜிபி வசதி வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை விரிவுபடுத்தலாம். இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1ல் இயங்குகிறது.

Samsung Mobile: சத்தமே இல்லாமல் கேலக்ஸி எம்13 பட்ஜெட் போனை வெளியிட்ட சாம்சங்!

ஒப்போ ஏ57 கேமரா (OPPO A57 Camera)

பட்ஜெட் ஒப்போ போனின் கேமராவைப் பொருத்தவரை புகைப்படம் எடுப்பதற்காக 13 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் உள்ளது. பின்புற கேமரா எல்இடி ப்ளாஷ் உடன் வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

செல்ஃபி, வீடியோ அழைப்பிற்காக 8 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் 5.0, GPS, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவினையும் ஸ்மார்ட்போன் பெறுகிறது.

போன் மொத்தமாக 187 கிராம் எடையுடன் வருகிறது. Oppo ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5,000mAh பேட்டரியும், 33W வாட் வேகமான சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.