இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரிகளுக்கான விருந்தகம் இராணுவ தளபதியினால் திறப்பு

பனாகொடவில் அமைந்துள்ள இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையக அதிகாரிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிகட்டிடமான “Cyllenes Cave” விருந்தகத்தை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று (26) மாலை திறந்து வைத்தார்.

இலங்கை சிங்கப் படையணியின் நீண்டகால தேவைப்பாடுகளில் ஒன்றாக காணப்பட்ட புதிய கட்டிட தொகுதியில் தொலைக்காட்சி அறை, விருந்தினர்களின் வரவேற்பு அறை, பில்லியர்ட்ஸ் விளையாட்டிற்கான அறை, பொழுதுபோக்கு அறை, ஆகிய வசதிகளை உள்ளடக்கியதாகவும் சமிக்ஞை படையணி அதிகாரிகளின் தொழில்தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

அதிகாரிகள் மற்றும் படையினருக்காக வசதிகயை மேம்படுத்தலை அடிப்படையாக கொண்ட இராணுவத் தளபதியின் ‘இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025’க்கு அமைவாக இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் தளபதியும், தலைமை சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதம அதிதியவர்களின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்ததோடு, இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வரவேற்பளித்து “Cyllenes Cave,” அழைத்துச் சென்றனர்.

அதனையடுத்து சுப வேளையில் புதிய கட்டித்தின் நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்த பின்னர் நாடாவை வெட்டி திறந்து வைத்ததோடு கட்டிடதத்தை அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக கையளித்தார். பின்னர் பிரதம விருந்தினர் இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதியவர்களுடன் இணைந்து புதிய கட்டிடத்தை மேற்பார்வை செய்தார்.

இந்நிகழ்வில் போது கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா “இவ்வாறான வசதிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் இராணுவத்தின் தொழில் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்புமிக்கவர்கள் என்றும், முடியாதவையென ஒன்றுமில்லை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் இயங்கும் அமைப்பான இராணுவத்தின் சமிக்ஞை வழங்கும் பணிகளில் முன்னணியிலிருந்து செயற்படும் அதேவேளை இளயோரை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். அத்தோடு இத்தகைய வசதிகள் உங்களது தொழில் தரத்திற்கு மேலும் கண்ணியத்தை சேர்ப்பதாக அமையும் என்றும் கௌரவமான தொழில் அந்தஸ்த்துகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வாழ்த்தினார்.

நிகழ்வின் நிறைவம்சமாக பிரதம அதிதியுடன் படையணி அதிகாரிகள் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்துகொண்டிருந்ததோடு, பிரதம விருந்தினர் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்ட பின்னர் இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதியினால் இராணுவத் தளபதிக்கு வாழ்த்துக்களுடன் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் , மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்புப் பகுதிகளின் தளபதி மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் சஜித் லியனகே, சமிக்ஞை பிரிகேடின் தளபதி பிரிகேடியர் இமால் அஸ்ஸலாராச்சி, இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை இராணுவத்தின் நிதி உதவியை கொண்டு சமிக்ஞை படையணியினரால் அவசியமான தளபாடங்கள் மற்றும் ஏனைய வசதிகளை கொண்டதாக இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.