Elon Musk: எலான் மஸ்க் போட்ட ஒரு பதிவில் ஆடிப்போன ட்விட்டர்!

Elon Musk: டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என வலம் வந்த அதன் நிறுவனர்
எலான் மஸ்க்
ட்விட்டரை வாங்கும் முடிவை எடுத்து, அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதிலிருந்து பரபரப்பும், சர்ச்சைகளும் அவரைத் தொற்றிக்கொண்டது.

எலான் மஸ்க்
ட்விட்டர்
பதிவுகள் அதிகம் கவனம் பெற்று வரும் நிலையில், அவர் பதிவிட்ட புதிய கார்ட்டூன் ஒன்று சமூக வலைத்தளங்ளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கார்ட்டூனானது, பறவையை சுதந்திரமாக பறக்க கூண்டில் இருந்து திறந்து விடுவது போன்று இருந்தது.

Twitter Bots: ட்விட்டர் பாட்களை துவம்சம் செய்ய எலான் மஸ்க் கொடுத்த டிப்ஸ்!

சுதந்திர பறவை கார்ட்டூன்

முக்கியமாக சொல்லவேண்டும் என்றால், அந்த பறவை நீல நிறத்தில் காட்சி அளித்தது. ட்விட்டர் பறவையின் நிறமும் நீல நிறத்தில் இருப்பதால், அவரை பின் தொடருபவர்கள் ஒன்றிணைந்து பல காரணங்களை கமெண்டுகளாகப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த கூட்டை திறப்பவராக எலான் மஸ்க் காட்சியளிக்கிறார். பொதுவாக ட்விட்டரில் பேச்சுரிமை பறிபோய்விட்டது என்று புலம்பி வந்த மஸ்க், அதனை கையகப்படுத்தியதில் இருந்து, பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார்.

ட்விட்டர் தளத்தில் எந்த ஒரு நபரும் சட்டத்துக்கு உட்பட்டு சுதந்திரமாகப் பேசலாம் என்றும், ட்விட்டரில் உள்ள தானியங்கி போட்டுகள் விரைவில் களையப்படும் என்று மஸ்க் உறுதியளித்திருந்தார்.

Starlink Satellite: ஸ்டார்லிங் சேட்டிலைட்டை அழித்து விடுவோம் – எச்சரிக்கும் சீனா!

மக்களின் கவனத்தை ஈர்த்த ட்வீட்

எலான் மஸ்க் ட்வீட் மக்களின் கவனத்தை ஈர்க்க அதிக நேரம் எடுக்கவில்லை. பதிவிட்ட சில மணி நேரங்களில், இது 2.8 லட்சத்திற்கும் அதிகமான இதயங்களைப் பெற்றது.

மேலும், அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த இடுகை 27,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு தங்கள் மனதில் எழும் பல்வேறு கருத்துகளை ட்விட்டர் வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

Shibetoshi Nakamoto எனும் புனைபெயருடன் இருக்கும் ட்விட்டர் வாசி, “எந்த கோபம் இருந்தாலும், நான் இன்னும் கூண்டில் இருக்கும் பறவை தான்.” என கமெண்ட் செய்துள்ளார்.

Elon Musk: ட்விட்டரை ஒப்படைக்கிறோன்; ஆனால் அதற்கு நான் இறக்க வேண்டும்!

பாதுகாப்பான ட்விட்டர் தளம்

Dogecoin கிரிப்டோகரன்சியை உருவாக்கியவர் பில்லி மார்கஸ் (Billy Markus). இவர் Shibetoshi Nakamoto என்ற புனைப்பெயருடன் ட்விட்டரில் செயல்பட்டு வருகிறார். பல எதிர்ப்புகளை தொடர்ந்து சந்தித்து வரும் எலான் மஸ்க், தனது முடிவில் மட்டும் தீர்க்கமாக இருப்பதாகவேத் தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

ட்விட்டரில் உள்ள பிழைகள் அனைத்தும் களையப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களை வலுவூட்டச்செய்து, பயனர்களுக்கு ட்விட்டரை ஒரு சொர்க்க தளமாக மாற்ற உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பது யாவரும் அறிந்ததே.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.