ராமேஸ்வரம் அருகே மீனவ பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், இருவரை வரும் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகாடு கிராமத்தை சேர்ந்த மீனவப் பெண்ணை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரை எரித்துக் கொலை செய்தனர். இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்நிலையில், நீதிபதி இளையராஜா வீட்டில் அவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை வரும் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் ராமநாதபுரம் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM