Jio vs Airtel vs Vi: ரூ500க்குள் ஹாட்ஸ்டார் இலவசமாக கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்

மார்வெல் திரைப்படங்கள், டிவி ஷோ, சீரியல், ஐபிஎல் போட்டிகள்என அனைத்தையும் காணும் ஒன்ஸ்டாப் இடமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திகழ்கிறது. அதற்கு தனியாக சந்தா கட்டணம் செலுத்தி உபயோகிப்பது பயனர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்தது. பயனர்களை சுமையை போக்கும் வகையில், சில தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுன் டிஸ்னி ஹாட்ஸ்டாரை இலவசமாக வழங்குகின்றன. சில திட்டங்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில், மலிவான விலையில் கிடைக்கின்றன.

அந்த வகையில், ஜியோ, ஏர்டெல், வி நிறுவனத்தின் டிஸ்னி ஹாட்ஸ்டார் பலன் அடங்கிய டாப் ரீசார்ஜ் திட்டங்களை இங்கே காணலாம்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ரூ500க்குள் டிஸ்னி ஹாட்ஸ்டார் பலன் அடங்கிய 3 திட்டங்களை கொண்டுள்ளது. அதில், ரூ151 ஆட் ஆன் பேக் பயனர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில், மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் வசதியும், 8 ஜிபி டேட்டா வசதியும் கிடைக்கிறது. இந்த டேட்டாவை, நீங்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்த பிளானின் வேலிடிட்டி காலம் வரை உபயோகிக்கலாம்.

இரண்டாவதாக, ரூ333 திட்டத்தில் 28 நாள்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக, 3 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி கிடைக்கின்றன. மேலும், வரம்பற்ற குரல் அழைப்புகளும், தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கின்றன.

இறுதி திட்டமான ரூ499, 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி ஓராண்டுக்கு கிடைக்கிறது. கூடுதலாக, தினமும் 2ஜிபி டேட்டாவும், வரம்பற்ற குரல் அழைப்பும், டெய்லி 100 எஸ்எம்எஸூம் கிடைக்கின்றன.

ஏர்டெல்

ஏர்டெல், ரூ500க்குள் டிஸ்னி ஹாட்ஸ்டார் பலன் அடங்கிய 2 திட்டங்களை கொண்டுள்ளது. முதல் திட்டமான ரூ399 பிளான் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், தினமும் டேட்டா 2.5 ஜிபி கிடைக்கிறது. இதில், மூன்று மாத டிஸ்னி ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. கூடுதலாக வரம்பற்ற அழைப்பும், டெய்லி 100 மெசேஜ் வசதியும் கிடைக்கிறது.

அடுத்த, ரூ499 திட்டமும் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். ஆனால், முந்தைய திட்ட பலன்களுடன் ஒப்பிட்டால், இதில் ஓராண்டிற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியாவில் ரூ500க்குள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதியுடன் ஒரு திட்டம் மட்டுமே உள்ளது. ரூ499 திட்டம், 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், தினமும் 2 ஜிபி டேட்டாவும், வரம்பற்ற குரல் அழைப்பும், 100 எஸ்எம்எஸூம் கிடைக்கின்றன. கூடுதலாக இத்திட்டத்தில் ஓராண்டிற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி கிடைக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.