ஆரம்பகாலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜி.கே.மணி, கடந்த 25 ஆண்டுகளாக பாமக தலைவராக இருந்து வந்தார். தற்போது அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அன்புமணி கல்லூரி காலங்களில் படிப்பில் மட்டுமல்லாது, கால்பந்து, கூடைப்பந்து, பேட்மின்டன் என அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்.
1995-ம் ஆண்டு தனது தந்தை மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்த “பசுமைத்தாயகம்” எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் அன்புமணி பணியாற்றினார்.
அதன் பிறகு 2004-ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணியில் நாடாளுமன்றத்துக்கு தேர்வானார் அன்புமணி. அவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
2006-ம் ஆண்டு பா.ம.க-வின் இளைஞரணித் தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்புமணி.
2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.கவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார்.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் பாமக வெற்றுபெற்றது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாமக, 2.O என்ற திட்டத்தை முன்னெடுத்து செல்ல அன்புமணியை தலைவராக்கி இருக்கிறது பாமக கட்சி.