இந்தியாவின் அதிக பிரபல நடிகர் : நம்பர் 1 விஜய், நம்பர் 6 அஜித்குமார்
இந்திய அளவில் கடந்த ஆறு மாதங்களில் சில பான் இந்தியா படங்கள் வெளிவந்துள்ளன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், பீஸ்ட், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழிகளிலும் வெளியானது. இதனால் தென்னிந்திய நடிகர்கள் கூட இந்திய அளவில் பிரபலமானார்கள்.
ஆர்மக்ஸ் மீடியா நிறுவனம் இது குறித்த ஒரு சர்வேயை எடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மாநிலங்களில் உள்ள நடிகர்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
|
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 2022க்காக எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழ் நடிகரான விஜய் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு தமிழ் நடிகரான அஜித்திற்கு அந்த டாப் 10 பட்டியலில் 6ம் இடம் தான் கிடைத்துள்ளது. நடிகர் சூர்யா இந்தப் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பான்-இந்தியா ஸ்டார் என்றழைக்கப்படும் பிரபாஸ் 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜுனியர் என்டிஆர் 2ம் இடத்தைப் பிடித்துள்ளார். 4வது இடத்தில் அல்லு அர்ஜுன், 5வது இடத்தில் அக்ஷய்குமார், 7வது இடத்தில் யஷ், 8வது இடத்தில் ராம் சரண், 10வது இடத்தில் மகேஷ் பாபு உள்ளனர்.