காந்திநகர்: குஜராத் காந்திநகர் கலோலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் நானோ யூரியா தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஆலையில் ஒரு பை சிறுமணி யூரியாவிற்கு சமமாக 500 மி.லி. பாட்டிலில் நானோ யூரியா தயாரிக்கப்படுகிறது. நானோ யூரியா தொழிற்சாலை மூலம் போக்குவரத்து செலவுகள் குறைக்கப்படும், சிறு விவசாயிகள் பயன்பெறுவர் என பிரதமர் தெரிவித்தார்.