சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதோடு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டு உள்ளது. ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்ட கருணாநிதி சிலை இதுவரை நிறுவப்பட்ட கருணாநிதி சிலைகளில் மிகப்பெரியதாகும்.
இந்நிலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட்டது. இதற்காக, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாழுடுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணுவித்து வரவேற்றார்.
இதையும் படியுங்கள்..
ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை- துணை ஜனாதிபதி இன்று மாலை திறந்து வைக்கிறார்