புதுடெல்லி: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, 1993-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுக்கு இடையே வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.09 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து கடந்த 2010ம் ஆண்டு குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த 21-ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சொத்து குவித்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல் தீர்ப்பளித்தார். மேலும், ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் அவரது 4 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.