சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து கருணாநிதி சிலையின் கீழே “இந்தி திணிப்பை எதிர்ப்போம்” என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார்.
இந்தி சிலையின் கீழே 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை:
- “வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்”
- “அண்ணா வழியில் அயராது உழைப்போம்”
- “ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்”
- “இந்தி திணிப்பை எதிர்ப்போம்”
- “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி”
இந்த 5 வாசகங்களும் சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ளன.
இதைத்தவிர்த்து சிலை திறப்பு விழாவை முன்னிட்டு கருணாநிதியின் நினைவிடம் ” ஊருக்காக வாழ்ந்தவர் சிலையானார், உழைப்பின் கைகளால் உயிரானார்” என்ற வாசகத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நேரலை இங்கே: