Green Deposits news in tamil: க்ரீன் டெப்பாசிட்ஸ் (Green Deposits) என்பது நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குநர்களால் வழங்கப்படும் ஃபிக்சட்-டெர்ம் டெப்பாசிட்ஸ் (fixed-term deposits) ஆகும். இதில் க்ரீன் டெப்பாசிட்ஸீட்டும் (பசுமை வைப்பு தொகை- green deposits) ஒன்று. நமது சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களில் தங்கள் உபரி பண இருப்புகளை முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கான நிலையான கால வைப்பு தொகையாக இது இருந்து வருகிறது.
க்ரீன் பேங்கிங் ப்ராடக்களின் எழுச்சியுடன் HSBC மற்றும் HDFC போன்ற பல வங்கி சார்ந்த கடன் வழங்குநர்கள் இந்தியாவில் கார்ப்ரேட்கள் மற்றும் தனிநபர்களுக்காக பசுமை வைப்பு தொகையை தொடங்கியுள்ளனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாசு தடுப்பு மற்றும் நிலையான நீர் திட்டங்கள் போன்ற துறைகளில் பல பெரிய திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. சந்தையில் அறிமுகமாகி உள்ள இந்த புதிய சலுகை ESG (Environmental, social and governance) மற்றும் நிலையான முதலீட்டின் முக்கியத்துவம் பற்றிய அதிகரித்த விழிப்புணர்வை குறிக்கிறது.
கிரீன்ஹவுஸ் உமிழ்வுகளால் ஏற்படும் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்துவதே பரந்த நோக்கமாகும். முதலீட்டாளர்கள் சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகளில் பங்கேற்க பசுமை வைப்புகளில் செய்யும் முதலீடுகள் உதவும். குறைந்த கார்பன், காலநிலை-எதிர்ப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கு மாற்றத்தை ஊக்குவிக்கும் தகுதியான வணிகங்கள் மற்றும் திட்டங்களுக்கு நிதியளிப்பது Green deposits-ன் முக்கிய நோக்கம்.
எந்தெந்த துறைகளில் க்ரீன் ஃபிக்சட் டெப்பாசிட்ஸ் முதலீடு செய்யலாம்?
க்ரீன் டெப்பாசிட்ஸில் செய்யப்பட்ட பணம் முதலீடு செய்யப்படும் துறைகளில் ஆற்றல் திறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமைப் போக்குவரத்து, விவசாயம், வனவியல், கழிவு மேலாண்மை, பசுமை இல்ல வாயு குறைப்பு மற்றும் பசுமை கட்டிடங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
முக்கிய அம்சங்கள்:-
அதிக வட்டி விகிதம்:
நீங்கள் க்ரீன் டெப்பாசிட்ஸில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 6.55% வட்டி விகிதம் பெறலாம். வழக்கமான ஃபிக்சட் டெபாசிட்களில் ஒருவர் வழக்கமாக பெறுவதை விட இது சற்று அதிகமானது.
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வருவாய்:
மூத்த குடிமக்கள் தங்கள் டெபாசிட் தொகையில் ஆண்டுக்கு 0.25% முதல் 0.5% வரை அதிகமாக பெறலாம்.
ஆன்லைன் முதலீடுகளுக்கு கூடுதல் வருமானம்:
முதலீட்டாளர்கள் ஆன்லைன் பிளாட்ஃபார்மை தேர்ந்தெடுத்து, கடன் வழங்குநர்களின் வெப்சைட்ஸ் அல்லது ஆப்ஸ்கள் மூலம் Green க்ரீன் டெப்பாசிட்ஸில் முதலீடு செய்தால், ரூ.50 லட்சம் வரையிலான டெபாசிட் தொகையில் 0.1% கூடுதல் வருமானத்தை பெறுவார்கள்.
இன்ஷூரன்ஸ் பேக்கிங்:
க்ரீன் டெப்பாசிட்ஸின் கீழ் செய்யப்படும் டெப்பாசிட்கள் இன்ஷூரன்ஸ் மூலம் சப்போர்ட் செய்யப்படுகின்றன. (ரூ.5 5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு).
முதலீட்டு காலம்:
க்ரீன் டெப்பாசிட்களில் முதலீட்டின் குறைந்தபட்ச காலம் 18 மாதங்கள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
க்ரீன் டெப்பாசிட்ஸில் யார், யார் முதலீடு செய்யலாம்?
அனைத்து இந்திய குடிமக்கள், என்ஆர்ஐ-க்கள், கார்ப்பரேட்கள் மற்றும் அறக்கட்டளைகள் இங்கே முதலீடு செய்யலாம். இதில் கூட்டாண்மை நிறுவனங்கள், சங்கங்கள், கிளப்புகள் மற்றும் சிறார்களின் சார்பாக பாதுகாவலர்களும் உள்ளடங்குகின்றனர்.
முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான அபராதம் எவ்வளவு?
க்ரீன் டெப்பாசிட்ஸில் முதலீடு செய்த முதல் 3 மாதங்களுக்கு முதலீட்டாளர் பணத்தை எடுக்க முடியாது. ஒரு தனிப்பட்ட முதலீட்டாளர் 3 மாதங்களுக்குப் பிறகு பணத்தை திரும்ப பெற்றாலும், ஆறு மாதங்களுக்குள் இருந்தால் பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களைப் பொருட்படுத்தாமல் வட்டியானது 3% ஆக இருக்கும்.
தனிநபர் அல்லாத முதலீட்டாளரின் விஷயத்தில், அத்தகைய முன்கூட்டிய திரும்பப் பெறுதல்களுக்கு எந்த வட்டியும் கிடைக்காது. இருப்பினும் 6 மாதங்களுக்கு பிறகு முதலீட்டை திரும்பப் பெற்றால் 1% அபராதம் விதிக்கப்படும். அதாவது முதலீட்டாளர்கள் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை விட 1% குறைவாக பெறுவார்கள்.
ஓவர் டிராஃப்ட் வசதி எப்படி?
க்ரீன் டெப்பாசிட்களுக்கு எதிராக நீங்கள் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம். ஆனால் இந்த நிகழ்வில், டெபாசிட் வழக்கமான ஃபிக்சட் டெபாசிட்டாக மாற்றப்படும்.
க்ரீன் டெப்பாசிட்ஸில் முதலீடு செய்வது எப்படி?
பான் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் சென்று, உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, தொகை மற்றும் காலத்தை தேர்ந்தெடுக்கலாம். green fixed deposit ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றவும். இல்லையெனில் நீங்கள் இந்த டெபாசிட் வசதியை வழங்கும் வங்கிக்கு நேரடியாக செல்லலாம்.
பொதுவாக, க்ரீன் டெப்பாசிட் மிதமான மற்றும் அதிக வருமானத்தைத் துரத்தும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான முன்மொழிவாக இருக்காது. எனினும் பழமைவாத முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இதை முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். எவ்வாறாயினும், பசுமை வைப்புத்தொகைகள் வெறும் முதலீடுகள் மற்றும் வருமானத்தை ஈட்டுவதை விட பெரிய நோக்கத்தை கொண்டுள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் பசுமையான நிலையான வைப்புகளை கருத்தில் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாளை உருவாக்க ஒரு குறிப்பிட்ட பகுதியை முதலீடு செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil