சென்னை; தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, வரி விதிப்பு, உரிய அனுமதி தொடர்பான விதிகளையும் இந்த குழு உருவாக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர். மேலும் கட்டட விதிகள், குடிநீர் விதிகள், கழிவுநீர் விதிகள், குடிநீர் விதிகள், திடக்கழிவு மேலாண்மை விதிகள் உருவாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, வரிவிதிப்பு, உரிய அனுமதி தொடர்பான விதிகளையும் இந்த குழு உருவாக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழு உருவாக்கும் புதிய விதிகளை தொடர்பான அறிக்கையை ஜூன் 10க்குள் சமர்பிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் நகராட்சிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தின் 74 வது திருத்தச் சட்டம் 1992ன் விதிகளின் படி இயங்குகிறது.மிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் மூன்றாம் நிலை பேரூராட்சி, இரண்டாம் நிலை பேரூராட்சி, முதல் நிலை பேரூராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.