‘Thanks, but no thanks’: எலான் மஸ்க் டுவிட்டுக்கு பதிலளித்த ஓலா நிறுவனர்

டெஸ்லா கார் நிறுவனத்தின் எலான் மஸ்க் சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் வரியைக் குறைக்கும் வரையிலும் இந்தியாவில் தங்களது வாகனங்களை சர்வீஸ் செய்ய அனுமதிக்கும் வரையிலும் கார் தொழிற்சாலையை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் Thanks, but no thanks என பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

எலான் மஸ்க் அவர்களின் டுவிட்டுக்கு பவிஷ் அகர்வால் அளித்த இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது திடீரென தீப்பிடித்து எரிந்த போதிலும் எலக்ட்ரிக் வாகனத்துக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை அடுத்து நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனத்தையும் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1000 ஏக்கர் நிலம் மற்றும் 10,000 கோடி முதலீட்டை இந்த திட்டத்திற்காக கொண்டு வர ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி வருவதாக கூறப்படுகிறது.

500 ஏக்கர்
 

500 ஏக்கர்

ஓலா நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளதாகவும் அதில் உலகின் மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1000 ஏக்கர்

1000 ஏக்கர்

அதேபோல் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக 1000 ஏக்கர் நிலத்தை தேடும் பணியில் இருப்பதாகவும், இந்த ஆண்டுக்குள் 1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதன்பின் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் எலக்ட்ரிக் கார்

முதல் எலக்ட்ரிக் கார்

ஓலா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என ஏற்கனவே பவிஷ் அகர்வால் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.

எலக்ட்ரி கார் பேட்டரி

எலக்ட்ரி கார் பேட்டரி

மேலும் எலக்ட்ரிக் காருக்கான பிரத்யேகமாக பேட்டரி அமைக்கும் பணியும் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அரசாங்கம் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Thanks, but no thanks

‘Thanks, but no thanks

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அவர்கள் இன்று டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘இந்தியாவில் வரியை குறைக்காத வரையில் டெஸ்லா நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த டுவிட்டிற்கு பவிஷ் அகர்வால், ‘Thanks, but no thanks என கூறியுள்ளார். இந்த டுவிட்டில் உள்ள ஆழ்ந்த நகைச்சுவையை டுவிட்டர் பயனாளிகள் ரசித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola Electric’s Bhavish Aggarwal to Elon Musk: Thanks, but no thanks

Ola Electric’s Bhavish Aggarwal to Elon Musk: Thanks, but no thanks |’Thanks, but no thanks’: எலான் மஸ்க் டுவிட்டுக்கு பதிலளித்த ஓலா நிறுவனர்

Story first published: Saturday, May 28, 2022, 20:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.