என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி

தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரும், ஒன்றுபட்ட ஆந்திராவில் 3 முறை முதலவருமாக இருந்தவரான என்.டி.ராமராவின் 100 வது பிறந்த நாள் இன்று ( மே 28). இதை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் என்டிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள என்டிஆர் சமாதிக்கு ஜூனியர் என்டிஆர் இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். என்டிஆரின் மகனான என்.டி.பாலகிருஷணா சொந்த கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நூற்றாண்டு கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்களில். என்.டி.ராமராவ் நடித்த படங்கள் திரையிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.