கருணாநிதியுடன் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், அவரின் செயல்பாடுகளை நான் வியப்போடு தான் பார்த்துள்ளேன் என்று, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது,
“கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி.
நாட்டிலுள்ள பெருமைமிக்க முதலமைச்சர்களின் கலைஞர் கருணாநிதியும் ஒருவர். நான் என்னுடைய இளம்வயதில் கலைஞரின் பேச்சை கேட்டு ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். அவர் ஒரு சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்.
அவர் கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக நான் வாதாடினேன். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவருடைய கருத்தை முன்வைப்பதில் அவர் தனி திறன் கொண்டவர்.
இந்தி மொழி மட்டும் அல்ல, எந்த மொழியையும் திணிக்க கூடாது. எந்த மொழியையும் எதிர்க்க கூடாது. உங்களுக்கு தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்” என்று வெங்கையா நாயுடு பேசினார்.