ஒன்றிய அரசு, திராவிட மாடல், ஓராண்டு சாதனை ஒன்றுத்துக்கும் ஆகாது., – பிரேமலதா விஜயகாந்த் நெத்தியடி.!

ஒன்றிய அரசு, திராவிட மாடல் போன்றவையால் எந்த பயனும் இல்லை என்று, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேமலதா விஜயகாந்த், கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

“கோவையில் விதிகளை மீறி கனரக வாகனங்கள் சென்று வருவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதற்கு மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு, திராவிட மாடல் என்று சொல்வதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. தனது வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

திராவிட மாடல், ஓராண்டு சாதனை என்று அவர்கள் மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு மோசமாகவும், கேள்விக்குறியாக மாறியுள்ளது.

விசாரணைக்கு என்று அழைத்துச் சென்ற நபர் கொலை செய்யக்கூடிய நிலையே தற்போது உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை திறக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மட்டுமே வருகிறார்கள். எந்த அடிப்படை வசதியும் இவர்கள் செய்து தருவதில்லை” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.