மும்பை : மஹாராஷ்டிராவில், புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு, ஏழு பேருக்கு இருந்தது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவின், புனே நகரைச் சேர்ந்த ஏழு பேருக்கு, புதிய உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.பி.ஏ., – 4 மற்றும் பி.ஏ., – 5 என்ற இந்த புதிய உருமாறிய ஒமைக்ரான் வகை, தென்னாப்ரிக்காவில், முதல் முறையாக, கடந்த ஏப்ரலில் தென்பட்டது.
அதன்பின் பல நாடுகளில் இதன் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது புனேயைச் சேர்ந்த ஏழு பேருக்கு இந்த புதிய உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இம்மாதம் 4- 18 வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்ததாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி குணமடைந்துள்ளதாகவும், மஹாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதில், நான்கு பேருக்கு, பி.ஏ., – 4 வகையும், மூன்று பேருக்கு, பி.ஏ., – 5 வகை பாதிப்பும் இருந்துள்ளது.
மும்பை : மஹாராஷ்டிராவில், புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு, ஏழு பேருக்கு இருந்தது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவின், புனே நகரைச் சேர்ந்த ஏழு பேருக்கு, புதிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.