இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை…பெண்கள் பாதுகாப்பு குறித்து உ.பி அரசு அதிரடி உத்தரவு!


 பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, பெண் பணியாளர்களின் எழுத்துபூர்வ சம்மதமின்றி இனி இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை எந்த தொழில் நிறுவனங்களும் அவர்களை பணியில் அமர்த்த கூடாது என உத்திரபிரேதசத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை எண்ணிக்கை கொண்ட மாநிலமாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைப்பெறும் மாநிலமாகவும் திகழும் உத்திரபிரேதசத்தில் பெண்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை...பெண்கள் பாதுகாப்பு குறித்து உ.பி அரசு அதிரடி உத்தரவு!BBC TAMIL

அதில் இரவு 7 மணி முதல் காலை 6 வரை பணியில் அமர்த்தப்படும் பெண் தொழிலாளர்களின் எழுத்துப்பூர்வமான சம்மதம் இன்றி இனி எந்த தொழில் நிறுவனங்களும் பெண்களை இரவு நேரப்பணிகளில் அமர்த்தகூடாது என உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் இருந்து உணவு தானியங்களை வெளியேற்ற தயார்: ஜெர்மன், பிரான்ஸ் தலைவர்களிடம் புடின் தெரிவிப்பு!

இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை...பெண்கள் பாதுகாப்பு குறித்து உ.பி அரசு அதிரடி உத்தரவு!

அத்துடன் மேற்குறிப்பிட்ட நேரத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளருக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான பாதுகாப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும், அவர்களது பணியிடத்திற்கு அருகில் கழிப்பறை வசதிகள் இருப்பதை அந்தந்த தொழில்நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.