சிறையில் அடைக்கப்பட்ட உக்ரைன் போர் கைதிகளை பெயர் தெரியாத போதைப்பொருளை உட்கொள்ள செய்து ரஷ்யபடையினர் துன்புறுத்தல் செய்து வருவதாக ஒம்புட்ஸ்வுமன் டெனிசோவா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்காவது மாதமாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், இருநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மரியுபோல் அருகே சிறைப்பிடிக்கப்பட்ட போர் கைதிகளை மருத்துவமனையில் சந்தித்து பேசிய ஒம்புட்ஸ்வுமன் டெனிசோவா(Ombudswoman Denisova)ரஷ்ய சிறைக்கூடங்களில் உக்ரைனிய போர் கைதிகளுக்கு வழங்கப்படும் சித்திரவதைகளை வெளிபடுத்தியுள்ளார்.
Released Ukrainian POWs told they were tortured and drugged with unknown substances in Russian captivity – Ombudswoman Denisova
She talked to POWs taken into captivity near Mariupol while visiting them in a hospital 🧵https://t.co/WYPIh8cEh6
— Euromaidan Press (@EuromaidanPress) May 28, 2022
REUTERS
பலவார முற்றுகைக்கு பிறகு ரஷ்ய படைகளிடம் சரணடைந்த அசோவ் ரெஜிமென்ட் சேர்ந்த உக்ரைனிய ராணுவ வீரர்களை மிகக் கொடுரமாக சித்திரவதை செய்வதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய போர் கைதிகளை தங்களது கணத்த காலணிகள் கொண்டும், துப்பாக்கி முனைகளை கொண்டும் தாக்குவதாகவும், உடலில் மின்சார அதிர்ச்சிகள் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Associated Press
அத்துடன் ரஷ்ய வீரர்களிடம் சரணடைந்த உக்ரைனிய போர் கைதிகளுக்கு M என்று வார்த்தையுடன் தொடங்கிய பெயர் தெரியாத போதைப் பொருளை கட்டாயப்படுத்தி வழங்குவதாகவும் இதனால் கைதிகள் தங்களது சுயநினைவை இழந்து மயக்கமடைந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனிய போர் கைதிகளை “எங்களை மன்னியுங்கள் அன்பான ரஷ்யர்களே” என்றும், ரஷ்ய தேசிய கீதத்தை பாட சொல்லி தொல்லை செய்வதுடன் அவ்வாறு செய்யாதவரை கடுமையாக சித்திரவை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய படைகளிடம் பிடிப்பட்ட 17 முதல் 20 உக்ரைனிய பெண் கைதிகளை சுகாதாரம் இல்லாத அறையில் அடைத்து சித்தரவதை செய்வதுடன், அவர்களது உளவியல் அழுத்தத்தை அதிகரிக்க சிறைப்பிடிக்கபட்ட உக்ரைனிய ஆண்களை கண்முன்னே அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களை கட்டாய உடலுறவிற்கு நிர்பந்தப் படுத்தியாதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சிறைகூடங்களில் எத்தகைய மருத்துவ வசதிகளும் வழங்கப்படவில்லை எனவும், ICRC பிரதிநிதிகள் உதவி வழங்கும் போர் கைதிகள் முகாமிற்கு கைதிகள் மாற்றப்பட்ட போது தான் மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்..
உணவு என்ற பெயரில் பாணும் பன்றி கொழுப்பையும் வழங்கி விட்டு அதனை மனித மாமிசம் என ரஷ்யர்கள் பயமுறுத்திவதாகவும் தெரிவித்துள்ளார்.