நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
திருமணம் குறித்து கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா, இருவருக்கும் குடும்பத்தார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்தபடி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பிதழ் முக்கியமான விஐபிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.