அரியலூர்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அல்ட்ராடெக் சமூக நல அறக்கட்டளை சார்பில்,10-ம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘திசைகாட்டி-2022’ யூ-டியூப் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், இஸ்ரோ முன்னாள்இயக்குநரான விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, வருமான வரித் துறை முன்னாள் அதிகாரி ஆர்.பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, கடலோர காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கமாண்டன்ட் சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்று, 10-ம்வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்றும்,தொழிற்படிப்புகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், ‘திசைகாட்டி-2022’ யூ-டியூப் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. யூ-டியூப் வீடியோவை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், ரெட்டிப்பாளையம் அல்ட்ரா டெக் ஆலைத் தலைவர் ஜெ.எ.சஜேந்திரகுமார், துணைத் தலைவர் (மனித வளம்) சி.சந்தானமணி, உதவி பொது மேலாளர் (பணியாளர் உறவுகள், நிர்வாகம்) எம்.ஜி. தனஞ்ஜெயன், சமூகபொறுப்புணர்வு திட்ட மேலாளர் எ.கமலக்கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்பொது மேலாளர் (விற்பனை பிரிவு)டி.ராஜ்குமார் கலந்துகொண்டனர்.
இந்த வீடியோவை bit.ly/thisaikaati என்ற யூ-டியூப் லிங்க் மூலமாகவும், facebook.com/TamilTheHindu/videos என்ற முகநூல் லிங்க் மூலமாகவும் பார்த்து மாணவர்கள் பயனடையலாம்.