இலங்கைக்கு ரஷ்யா அனுப்பிய 90 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கிடைத்திருப்பதால் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா அனுப்பிய சரக்குகளை எடுக்க செலுத்த வேண்டிய பணம் இல்லாமல் ஒருமாதம் இந்த டெலிவரிக்காக காத்திருந்தது. இப்போது இந்த சரக்கை இலங்கை பெற்றுக் கொண்டதாகவும், சுத்திகரிப்பு ஆலை விரைவில் இயங்கும் எனவும் இலங்கை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு 72 புள்ளி 6 மில்லியன் டாலர் தொகை செலுத்தி இந்த 90 ஆயிரம் டன் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.இலங்கையில் உள்ள நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு நாடுகளிடம் உதவி கோரியிருப்பதாகவும் மேலும் சில சரக்கு கப்பல்கள் வர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.