ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் என்பவரின் மகன் வசந்தகுமார் (11). 5ம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் ரோஸ்மில்க் வாங்கிக் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயக்கமுற்ற அவரை, ஆம்புலன்ஸ் மூலமாக ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடைகாரர் பெத்ராஜ் என்பவரை விசாரித்த போது முருகானந்தம் என்பவர் வீட்டில் வைத்து தயாரிக்கும் ரோஸ் மில்க் கடைகளில் சப்ளை செய்வதாகவும் அதனைதான் அவரது மகன் குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுவனின் தாயார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்ணகி நகர் போலீசார், சந்தேகமரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரோஸ்மில்க்கின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிறுவனுக்கு சிறுவயதில் பிக்ஸ் வலிப்பு நோய் வருவதாகவும், அதனால் உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM