நேபாள நாட்டில், பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்ட விமானம் திடீரென்று மாயமாகி உள்ளது.
அண்டை நாடான நேபாள நாட்டில் இருந்து, டாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET இரட்டை இன்ஜின் கொண்ட விமானம், 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு, பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நகருக்கு காலை 9:55 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் மற்றும் நேபாளி குடிமக்கள், விமானிகள் உட்பட 22 பேர் இருந்தனர்.
விமான நிலையத்தில் செக்ஸ் வீடியோ ஒளிபரப்பு – பயணிகள் அதிர்ச்சி!
இந்நிலையில், முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் என்ற இடத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாயமான விமானத்தை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 22 பேருடன் விமானம் மாயமான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.