IPL 2022 Finals: ஐபிஎல் 15 ஆவது சீசன் – மகுடம் சூடப் போவது யார்?

 IPL 2022 finals Live Match Online GT vs RR, Live Streaming Today: 15 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடக்கம் முதலே பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுப்மான் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, சஹா, முகமது ஷமி, ரஷித்கான் என நட்சத்திர பட்டாளமே உள்ளது.

அதேபோல், சஞ்சு சாம்பன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒன்றை நம்பிக்கை நாயகமான ஜாஸ் பட்லர் திகழ்கிறார். அவரது விக்கெட்டை வீழ்த்துவது தான், குஜராத்தின் ஒரே குறிக்கோளாக இருக்கும். அவர் மட்டுமின்றி சாம்சன், தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால், ஹெட்மயர், அஸ்வின், சாஹல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் 2 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. லீக் சுற்றில் குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்திலும், முதலாவது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ராஜஸ்தான் வென்றது. மீண்டும் ஒருமுறை, இவ்விரு அணிகளும் மோதுவதால், சிறப்பான ஆட்டத்தை காட்டும் முனைப்பில் வீரர்கள் உள்ளனர்.

ஐபிஎல் நிறைவு விழா

ஐபிஎல் 2022 விளையாட்டுப் போட்டிகலுக்கான நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 6:25 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், ஏஆர் ரஹ்மான், நீத்தி மோகனின் இசைநிகழ்ச்சியும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மேடையை கலக்கவுள்ளார்.

மேலும், நிகழ்ச்சியில் இந்திய அணி முன்னாள் கேப்டன்களை அழைத்து கவுரவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற உயரதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, எப்போதும் இல்லாத அளவில் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தேச ப்ளேயிங் லெவன்

குஜராத் டைட்டன்ஸ் : விருத்திமான் சஹா (WK), ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (captain), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், சாய் கிஷோர், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, யாஷ் தயாள்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (c & wk), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், மெக்காய், போல்ட், சாஹல், பிரசித் கிருஷ்ணா

போட்டி நேரம் மாற்றம்

நிறைவு விழா காரணமாக இன்றைய ஆட்டம் 7.30 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரலை பார்ப்பது எப்படி

ஐபிஎல் இறுதிப்போட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இதுதவிர, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.