டெக் சேவை நிறுவனமான கூகுள் முதல் முறையாகத் தனது அலுவலகத்தைச் சொந்தமாக வடிவமைத்துத் தானாகவே கட்டியுள்ளது. இதற்காகத் தனிக் குழுவை 2017ல் உருவாக்கி திட்டம் தற்போது முழு வடிவம் பெற்று பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.
பொதுவாகக் கூகுள் போன்ற பெரிய டெக் நிறுவனம் தனது அலுவலகத்தை உலகம் முழுவதும் 3வது தரப்பு நிறுவனங்கள் வாயிலாகவே பூர்த்தி செய்யும், ஆனால் முதல் முறையாக கூகுள் சொந்தமாக அலுவலகத்தைக் கட்ட முடிவு செய்தது.
2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தின் படி பே வியூவ் கேம்பஸ் தற்போது முழுமையாகக் கூகுள் ஊழியர்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டு உள்ளது Charleston East திட்டம் முதல் கட்ட கட்டுமான நிலையில் உள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகம்: பேச்சுவார்த்தையை தொடங்கியது கூகுள்!
கூகுள் நிறுவனத்தின் இந்த பே வியூவ் கேம்பஸ் வடிவமைப்பில் பிரம்மாண்டமாக இருப்பது மட்டும் அல்லாமல் அணைத்தும் எலக்ட்ரிக், நெட் வாட்டர் பாசிடிவ், வட அமெரிக்காவின் மிகப்பெரிய ஜியோதெர்மல் தளம் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் ஆப்பிள் அலுவலகத்தை அடுத்து அதிகளவிலானோரின் கவனத்தை ஈர்த்த அலுவலகமாகக் கூகுள் அலுவலகம் உள்ளது.
Google’s open its Bay View campus first built on its own; Check the complete video
Google’s open its Bay View campus first built on its own; Check complete video கூகுள்-ன் பிரம்மாண்ட புதிய அலுவலகம்.. பார்க்கவே பயங்கரமா இருக்கே..!! – வீடியோ