‛நீ என்னை பார் நான் உன்னை பார்க்கிறேன்' – ரொமான்ஸ் மூடில் பிரியா அட்லி
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் லயன் என்ற படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தை அடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அட்லியின் மனைவியான பிரியா தொடர்ந்து அட்லியுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அட்லியுடன் தான் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவிட்டு, நீ என்னை பார் நான் உன்னை பார்க்கிறேன் என்று ஒரு பதிவு போட்டு உள்ளார். இதற்கு லைக்ஸ் குவிந்து கொண்டிருக்கிறது.