உதவி செய்வதற்காக நிகழ்ந்த அவலம்.. தவறான புரிதலால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர்..!

குழந்தை கடத்தி செல்வதாக வடமாநில இளைஞர் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த யோகேஷ். என்பவர் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து வருகிறார். வார இறுதி நாட்களில் அவர் மக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சிங்காநல்லூர் பகுதியில் பஞ்சுமிட்டாய் விற்க்கும் போது பொழுது 4 வயது சிறுமி ஒருவர் அந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமி சாலையை கடக்க சிரமப்பட்டிருக்கிறார். இதனைக்கண்ட யோகேஷ் சாலையை கடக்க முற்பட்ட இருந்த சிறுமியிடம் சென்று தன் வீட்டிற்கு சென்று விடுவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் அஅழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமியை பஞ்சுமிட்டாய் விற்பவருக்கு பிடித்து செல்வதை பார்த்த அந்த பொதுமக்கள் சிறுமியை கடத்தி செல்வதாக நினைத்து அவர் மேல் தாக்குதல் நடத்தினர். மேலும் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பகுதியில் அடிக்கடி பஞ்சுமிட்டாய் இருப்பதாகவும் அதனால் அந்த சிறுமியின் வீடு தெரியும் என தெரிவித்தார்.

இதனை அடுத்து, காவல்துறையினர் அவரை விடுவித்தனர். இந்நிலையில், வழக்கம் போல இன்றும் அவர் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி தனது தாயுடன் வந்துள்ளார். சிறுமி பஞ்சுமிட்டாய் கேட்கவே அந்த தாய் யோகேஷை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கணவனுக்கு உடனடியாக தகவல் அளித்தார்.

அந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் யோகேஷை சரமாரியாக தாக்கினர். அவர் ஹிந்தியில் தான் குழந்தையை கடத்த வில்லை என கூறியுள்ளார். ஆனால், அதனை அவர்கள் கவனிக்கவே இல்லை. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து யோகேஷை மீட்டனர்.

தவறான புரிதலால் வடமாநில இளைஞர்தாக்கப்பட்கடதோடு அவரின் இரண்டு நாள் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. சமீபமாக தவறான புரிதால் வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது. உதவி செய்த இளைஞருக்கு காயமும் அவமானமும் மட்டுமே மிஞ்சிய சம்பவம் வேதனையளிக்கிறது./

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.