சாஃப்ட் இட்லி ரகசியம்… 2 டீஸ்பூன் இந்தப் பொருளை சேர்த்து மாவு அரைச்சுப் பாருங்க!

மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சாஃப்ட் இட்லி செய்வதற்கான ரகசியம் இதோ… 2 டீஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க! மல்லிகைப்பூவே தோற்றுவிடும் அளவுக்கு சாஃப்ட் இட்லி கிடைக்கும் பாருங்க…

ஆயக் கலைகள் 64 என்பார்கள். அதில் சமையல் கலையும் ஒன்று. அதிலும் இட்லிக்கு மாவு அரைப்பது என்பது நிஜமாகவே கலைதான். ஏனென்றால், இட்லி சாஃப்ட்டாக இருந்தால்தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் இல்லையென்றால். இட்லி என்பது இரும்பாக இருந்தால் இட்லி பிடிக்காத வெறுப்பு உணவு பட்டியலில் சேர்ந்துவிடும்.

சாஃப்ட்டான இட்லி செய்வதற்கு பக்குவமாக மாவு அரைக்க வேண்டும். இதற்கு காரணம் மாவு கெட்டியாக இருந்தால், சுடும்போது இட்டிலி கல்லு போல மாறிவிடும். அதே நேரத்தில், மாவு ரொம்பவும் தண்ணீராக இருந்தாலும் இட்லி சப்பையாக வரும். அதுமட்டுமல்ல, அரிசி மாவுடன் சேர்க்கப்படும் உளுந்து அதிகமாகி விட்டால் பிரச்சனைதான். அதே போல, அரிசி அதிகமாகி விட்டாலும் பிரச்சனை. அரிசி மாவுடன் சேர்க்கப்பட்ட உளுந்து மாவு காரணமாக இட்லி புசுபுசுவென எழும்பி வராவிட்டாலும் பிரச்சனை. உண்மையில் சாஃப்ட் இட்லி செய்வது சர்க்கஸ் சாகசம் மாதிரிதான்.

ஆனால், அப்படி நீங்கள் சர்க்கஸ் சாகசம் எதுவும் செய்ய வேண்டாம், மல்லிகைப்பூவைவிட ஒரு சாஃப்ட் இட்லி செய்யலாம் இந்த பொருளை 2 டீஸ்பூன் சேர்த்தால் போதும் சூப்பர் சாஃப்ட் இட்லி வரும். அது என்ன பொருள் என்று பார்ப்போம் வாருங்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இட்லி அரிசி – 4 டம்ளர், 2 டேபிள்ஸ்பூன் – பொட்டுக்கடலை போட்டு, 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இன்னொரு அகலமான பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு – 1 டம்ளர், வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் சாஃப்ட் இட்லிக்கான ஸ்பெஷலான பொருள் பொட்டுக்கடலை தான்.

பிறகு, வழக்கம் போல இட்லி அரிசி பருப்பு வகைகளை எப்படி கழுவுவீர்களோ அதேபோல கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஊறிய பொருட்களை கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுக்க வேண்டும். முதலில் உளுந்து வெந்தயத்தை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து புசுபுசுவென ஆட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அரிசி பொட்டுக்கடலை சேர்ந்த கலவையை போட்டு ஆட்டி, அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக போட்டு, மாவுக்கு தேவையான அளவு உப்பையும் போட்டு கையால் நன்றாக கரைத்து வையுங்கள். கிரைண்டரை கழுவி அந்த தண்ணீரையும் மாவில் ஊற்றி கரையுங்கள். அப்போதுதான், மாவு புளிக்கும்.

இதையடுத்து, மாவை அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். 8 மணி நேரம் புளித்த பிறகு, மறுநாள் காலையில், இட்லி மாவை கலக்கி, இட்லி ச்இட்லி சட்டியில் இட்லியை வார்த்து வேகவைத்து பாருங்கள். நிச்சயமாக இந்த இட்லி மல்லிகைப் பூவே தோற்றுப் போகும் அளவுக்கு இட்லி சாஃப்ட்டாக இருக்கும்.

இந்த இட்லி மாவில் பொட்டுக்கடலை சேர்த்து இருப்பதால் கூடுமானவரை மாவை பிரிட்ஜில் வைத்தால் கூட 4 நாட்களில் இருந்து 5 நாட்கள் வரை தான் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள முடியும். அதற்கு மேலே இந்த மாவு கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், சாஃப்ட் இட்லி செய்வதற்கான சில டிப்ஸ்கள், அடுப்பில் இட்லி குண்டானை வைத்து விட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துவிட்டு அதன் பின்பு, தட்டில் இட்லி வார்த்து வைக்க வேண்டும். இட்லி நன்றாக வெந்து புசுபுசுவென வரும். இட்லி வேகும் போது அடுப்பை ரொம்பவும் சிம்மில் வைக்க கூடாது. மீடியம் ஃபிளேமில் வைக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.