ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவுடன் இந்தியா டிரா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜகார்த்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் – 4’ சுற்றில் மலேசியாவுடனான போட்டியில் இந்திய அணி 3- 3 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

இந்தோனேஷியாவில் 11வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி முன்னேறியது. இதில் ஜப்பான், மலேசியா, தென் கொரியா என 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ‘டாப்-2’ இடம் பெறும் அணி பைனலுக்கு செல்லும்.

நேற்று நடந்த முதல் ‘சூப்பர்- 4’ சுற்று போட்டியில் இந்திய அணி, ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்று இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் மலேசியாவை சந்தித்தது. இதில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடிக்க, போட்டி 3-3 என டிராவில் முடிந்தது. இந்தியா சார்பில் விஷ்ணுகாந்த் சிங், சன்ஜீப், சுனில் தலா ஒரு கோல் அடித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.