ராஜஸ்தானில் கணவர்களின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சகோதரிகளின் உடல்கள் மீட்கப்பட்ட கிணற்றில், புதிதாக பிறந்த சிசுவின் உடல் காணப்பட்ட விடயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை, மதுவுக்கு அடிமையான கணவர்களின் தாக்குதல் என துன்பத்திற்கு ஆளான சகோதரிகள் மூவர், இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர்களின் உடல்கள் நான்கு நாட்கள் கழித்து கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே புதிதாக பிறந்த சிசுவின் உடல் மிதந்ததாக சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தேடுதலின் போது புதிதாக பிறந்த சிசுவின் சடலம் காணப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், மீட்புக்குழுவினருடன் இணைந்து கிணற்றில் இறங்கி சிசுவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, தற்கொலை செய்துகொண்ட சகோதரிகளில் ஒருவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குழந்தை பிறக்க இருந்ததாக கூறிய பொலிஸார், மீட்கப்பட்ட ஐந்து சடலங்களும் வீங்கிய நிலையில் இருந்ததாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், சகோதரிகளில் ஒருவர் கிணற்றில் பிரசவித்ததாகவும், அவரது சிசுவின் உடல் தான் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விடயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.