ஆரணி: காணாமல்போன பள்ளி மாணவி இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

ஆரணி அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணமல்போன 11 ஆம் வகுப்பு மாணவி இன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவி. இவரின் மனைவி பச்சையம்மாள். இவர்களுடைய மகள் ஹரிபிரியா (16) ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
image
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற ஹரிபிரியா. கடந்த இரண்டு தினங்களாக காணாததால் பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியுள்ளனர்.
இதையடுத்து தனது மகள் ஹரிபிரியாவை கண்டு பிடித்து தருமாறு நேற்று, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஹரிபிரியாவின் தந்தை ரவி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹரிபிரியாவை தேடி வந்துள்ளனர்.
image
இந்நிலையில் இன்று காலை ஆகாரம் கிராமத்தை ஒட்டிய வயல் வெளியிலுள்ள விவசாய கிணற்றில் ஹரிபிரியா சடலமாக தண்ணீரில் மிதந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த ஹரிபிரியாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மேலே தூக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆரணி கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஹரிபிரியாவின் இறப்பு குறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.