ராம்சரணை சந்திக்க 264 கிலோமீட்டர் நடந்து வந்த ரசிகர்

சினிமா மீதும் தங்களது அபிமான நடிகர்கள் மீதும் தீவிரமான பிரியம் கொண்ட ஒரு சில ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவற்தாகவும் தங்களது அபிமான ஹீரோக்களை சந்திப்பதற்காகவும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ரசிகர் தனது அபிமான நடிகரான ராம்சரணை சந்திப்பதற்காக தனது ஊரிலிருந்து 264 கிலோமீட்டர்கள் நடந்தே வந்து ராம்சரனை சந்தித்துள்ளார் நான்கு நாட்களில் நடைபயணமாக இந்த தூரத்தை அவர் கடந்து வந்துள்ளார்.

அதேசமயம் அவர் இதைவிட இன்னொரு மாபெரும் விஷயத்தையும் செய்திருக்கிறார். தன்னுடைய சொந்த வயலில் நெல் நாற்று நடும் சமயத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய பரப்பளவில் நெல் நாற்றுக்கள் மூலமாகவே ராம்சரணின் உருவத்தை வரைந்து அதையும் புகைப்படமாக எடுத்து கொண்டு வந்து ராம்சரணுக்கு பரிசளித்துள்ளார். மேலும் தனது வயலில் விளைந்த இரண்டு மூட்டை நெல்லையும் ராம்சரணுக்கு அளித்து அவரை நெகிழ வைத்துள்ளார் இந்த அதி தீவிர ரசிகர்.

இப்படி ஒரு ரசிகர் தன்னை சந்திக்க வருவதை கேள்விப்பட்டு அவருக்காக நேரம் ஒதுக்கி அவருடைய அவர் தனக்காக செய்துள்ள விஷயங்களை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் ராம்சரண். தனது ரசிகருடன் ராம்சரண் நடத்திய சந்திப்பு குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.