நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாட்களில் முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களும் நிறைவடைகிறது.
இந்த 57 இடங்களுக்கும் வரும் ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் கடந்த மே 24ஆம் தேதி முதல்., தொடங்கியுள்ளது. மே 31ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களில் திமுக மூன்று இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஏற்கனவே அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் மட்டும் அந்த ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
மேலும் விவரங்களுக்கு..,