டிஜிட்டல் முறையில் விரைவில் பத்திர பதிவா.. எப்போது முதல் அமல்?

பத்திரம் என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது ஒரு சொத்தினை பற்றிய தகவல்களை உங்களுக்கு அளிக்கிறது. இதில் சொத்துக்கு உரிமையாளர் யார், அந்த உரிமையாளருக்கு என்னென்ன உரிமைகள் என்னென்ன இருக்கிறது உள்ளிட்ட பல அம்சங்களும் இருக்கும்.

இந்தியாவில் பல்வேறு வகையான பத்திரங்கள் உள்ளன. பொதுவாக இந்த பத்திரங்கள் ஒரு சொத்தின் உரிமையை மாற்றும் சட்ட பூர்வ ஆவணமாகிம். அவை பொதுவாக ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு சொத்தினை மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு: டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இணையாக வளரும் விவசாயப் பொருளாதாரம்..!

டிஜிட்டல் வடிவில் பத்திரம்

டிஜிட்டல் வடிவில் பத்திரம்

இத்தகைய பத்திர பதிவினை டிஜிட்டல் வடிவில் மாற்றும் திட்டத்தினை அரசு பல வருடங்களாக திட்டமிட்டு வருகின்றது. இந்தியாவில் அனைத்து பத்திரங்களையும் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும் திட்டத்தினை அரசு 2016ல் கொண்டு வந்தது. ஆனால் பத்திர பதிவு நடைமுறையானது தொடர்ந்து பத்திர பதிவு அலுவலகம் சென்று செய்ய வேண்டிய நிலையே உள்ளது.

டிஜிட்டல் பதிவு எப்போது?

டிஜிட்டல் பதிவு எப்போது?

இந்த பத்திர பதிவினையும் அரசு டிஜிட்டல் மூலமாக செய்ய திட்டமிட்டு வருகின்றது. விரைவில் ஆன்லைன் மூலமாகவே பத்திர பதிவு முறையும் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பதிவு அமலுக்கு கொண்டு வரப்பட்டால், உலகின் எந்தவொரு மூலையில் இருந்தும் பத்திர பதிவு முறையானது செய்ய முடியும்.

நடைமுறையில் சாத்தியமா?
 

நடைமுறையில் சாத்தியமா?

இம்மாதிரியான பத்திர பதிவு முறையானது மிக எளிதாக இருக்கும் என்றாலும், இதில் பல மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்பதே கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2022ம் பட்ஜெட்டில் மத்திய அரசு, ஒரே நாடு ஒரே பத்திர திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.

எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்?

எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்?

இதன் மூலம் நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் பத்திர பதிவினை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோல் செயல்படுத்தப்பட்டால் பல மோசடிகளும் அரங்கேறலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திர பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக நில உரிமையாளர்கள் நேரில் வர வேண்டிய அவசியம் இருக்காது. எனினும் இந்த திட்டத்தினால் பல நன்மைகள் இருப்பதை மறுக்க இயலாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா

English summary

Is land registration coming into effect digitally?

It is expected that then land registration will come into effect digitally soon.

Story first published: Sunday, May 29, 2022, 20:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.