டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார். ராஜிவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிருக்கின்றனர். அஜய் மக்கான் அரியானாவில் இருந்தும், ஜெயராம் ரமேஷ் கர்நாடகத்தில் இருந்து போட்டியிட தேர்வாகிறார். ராஜஸ்தானில் இருந்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகியோர் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.