உக்ரைன் போரில் முதல்முறையாக…ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்த காரியம்!


ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி 24ல் தொடங்கியதில் இருந்து தலைநகர் கீவ்-வில் மட்டுமே இருந்து வந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, முதல்முறையாக தற்போதைய முதன்மை போர் முனை நகரான கார்கீவ்-விற்கு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்ய ராணுவப் படையினர் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய படைகள் பின்நகர்த்தப்பட்டு தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அவர்களது தாக்குதல் கவனம் மறுசீரமைப்பு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து, தலைநகர் கீவ்-விட்டு வெளியேறாமல் இருந்த உக்ரைன் ஜானதிபதி ஜெலென்ஸ்கி முதல்முறையாக தற்போதைய ரஷ்ய படைகளின் முதன்மை போர் குறியாக இருக்கும் கார்கீவ்-விற்கு நகருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் போரில் முதல்முறையாக...ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்த காரியம்!EPA

ஜெலென்ஸ்கியின் இந்த பயணத்தின் போது, கார்கீவ் நகரை பாதுகாத்து வரும் உக்ரைன் ராணுவ படைகளுக்கு போர் பதங்களை வழங்கி கவுரவப்படுத்தினார்.

அத்துடன் ராணுவ வீரர்களிடம் உரையாடிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உங்களுடைய இந்த சேவைகளுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், நீங்கள் உங்களது உயிர்களை வாழ்க்கையை பணயம் வைத்து நமது நிலத்திற்காகவும், நமது மக்களுக்காவும் போராடுகிறீர்கள் என தெரிவித்தார்.

உக்ரைன் போரில் முதல்முறையாக...ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்த காரியம்!EPA

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் அலுவலகம் வெளியிட்ட வீடியோ பதிவில், ஜெலன்ஸ்கி குண்டுத் துளைக்காத பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளால் தாக்கி அழிக்கப்பட்ட கார்கீவ் நகரின் கட்டிடங்களை பார்வையிட்டது இடம்பெற்று இருந்தது.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் பெண் போர் கைதிகள் முன்பு… ஆண் ராணுவ வீரர்களை அடித்து சித்ரவதை செய்யும் ரஷ்யா!

உக்ரைன் போரில் முதல்முறையாக...ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்த காரியம்!EPA

மேலும் இந்த பதிவில் தெரிவித்துள்ள தகவலில், கார்கீவ் நகரில் இதுவரை 2,229 கட்டிடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன, அவற்றை கண்டிப்பாக மீண்டும் கட்டி எழுப்புவோம் மற்றும் அவற்றில் மீண்டும் உயிர்களை குடியேற்றுவோம் என தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் போரில் முதல்முறையாக...ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்த காரியம்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.